search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக தேசிய தலைவர் அமித்ஷா"

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்பு தொடர்பான செலவுகளை தெரிவிக்க முடியாது என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. #AmitShah #CIC
    புதுடெல்லி:

    பாஜக தேசிய தலைவராக அமித் ஷா பதவி வகித்து வருகிறார். இவருக்கு விஐபிக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, தீபக் ஜுனேஜா என்பவர் பாஜக தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்புக்காக மத்திய அரசு செலவழித்து வரும் தகவல்கள் கேட்டு மத்திய தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார்.

    அதில், ராஜ்ய சபாவில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மத்திய அரசின் செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.  மேலும், யார் யாருக்கெல்லாம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்ற பட்டியலையும் கோரியிருந்தார்.

    இந்த விண்ணப்பம் தொடர்பாக பதிலளித்த மத்திய தகவல் ஆணையம், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்பு செலவினங்கள் குறித்த தகவலை பாதுகாப்பு கருதி தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ளது. #AmitShah #CIC
    மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். #AmitShah #RambhauMhalgi #Chanakya #PMModi
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ராம்பாவ் மல்ஜியின் 75-வது பிறந்த நாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் ஆர்யா சாணக்கியரின் கொள்கைகளை ஒத்திருக்கிறது என பாராட்டி பேசினார்.

    மேலும், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கடைசி குடிமகனையும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் கொள்கையும் அதுபோலவே உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. மூத்த தலைவர் கே.எல்.அத்வானி, 1996-ல் நம்முடைய அரசியலமைப்பும் தேசிய மதச்சார்பின்மை என்ற தலைப்பு குறித்து பேசினார். மேலும், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராம்மாதவ், இந்த்ரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #AmitShah #RambhauMhalgi #Chanakya #PMModi
    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, 70 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் என்ன செய்தது? என ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார். #Jaipur #Amitshah #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் பங்கேற்றார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: 

    சமீப காலமாக நடைபெற்ற எட்டு இடைத்தேர்தல்களில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு எதிராக இன்னும் 14 மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வருகிறோம்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டியது, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கியது என பல்வேறு மக்கள் நலப்பணிகள் என பட்டியல் நீளுகிறது. ஆனால், ராகுல் இது போதாது, அது போதாது என்கிறார்.



    நீங்கள் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்?  மூன்று தலைமுறைகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் எதுவும் செய்யாததால் தான் எங்களால் மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்க முடிந்தது, ஏழைத் தாய்மார்களுக்கு சிலிண்டர்களை வழங்க முடிந்தது.      

    அவர் விடுமுறைக்கு எங்கு செல்கிறார் என்பதும், எங்கிருந்து வருகிறார் என்பதும் யாருக்கும் தெரியாது என குற்றம் சாட்டினார். #Jaipur #Amitshah #RahulGandhi 
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #Petrol #Diesel
    புதுடெல்லி:

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் வேளையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் பொருள்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஒரு சில தினங்களில் விலை உயர்வு குறையும்.

    மேலும், பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதையடுத்து, இந்த பிரச்னையில் விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார். #Petrol #Diesel
    ×